நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் காது மற்றும் முதுகுப் பகுதியில் தீவிர காயங்களோடு சிகிச்சைப் பெற்று வந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் யானை சிகிச்சைப் பலனின்றி கடந்த இருதினங்களுக்கு முன் உயிரிழந்தது.
இதனையடுத்து பரிசோதனையில், இந்த யானை ஊருக்குள் வந்தபோது சிலர் அதன் மீது பெட்ரோல் ஊற்றிய சாக்கை தூக்கி எரிந்து பின்னர் நெருப்பு வைத்தாகவும்,
ஆசிட் போன்ற திரவங்களை வீசி காட்டுக்குள் விரட்ட முயற்சித்த போது ஏற்பட்ட காயத்தால் யானை உயிரிழந்ததாகவும் வனவிலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பலரையும் கண்கலங்க வைத்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக நீலகிரியில் உள்ள மாவநல்லா பகுதியைச் சேர்ந்த ரேமண்ட் மற்றும் பிரசாத்(36) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஈடுபட்ட ரையன் (28) என்பரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். மூன்று பேர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யபட்ட ரேமண்ட் டீன் மற்றும் அவரது அண்ணன் ரிக்கி ரேயான் ஆகியோர் விதி மீறிய கட்டிடத்தில் நடத்தி வந்த 3 விடுதி அறைகளுக்கு கூடலூர்
வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்தனன் மற்றும் மசினகுடி ஊராட்சி செயலாளர் கிரண் ஆகியோர் போலிஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தனர்.
இந்த வீடியோவை கண்ட பலரும் அவர்களுக்கு தக்க தண்டனையை வழங்கவேண்டும் என்றும், தங்களின் சோகத்தை பதிவிட்டு வருகின்றனர்.