கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு செய்யக்கூடாத காரியங்கள் என்னென்ன? எச்சரிக்கை பதிவு இதோ

Report
292Shares

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில், இந்த மருந்தினை உடலில் செலுத்திய பின்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தியாவில், வரும் 16ம் தேதி முதல், கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு மற்றும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இரு தடுப்பூசிகளுமே இரு டோஸ்களை கொண்டதாகும். ஒரு டோஸ் போட்டால் மட்டும் கொரோனா வராது என மெத்தனமாக இருந்துவிடக் கூடாது.

முதல் டோஸ் போட்ட பிறகும், வெளியிடங்களுக்கு அனாவசியமாக போகக் கூடாது. தடுப்பூசியின் இரண்டு டோஸ் 28 நாட்கள் இடைவெளியில் எடுக்கப்பட வேண்டும்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது. தடுப்பூசி போட்ட 42 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் என்று கூறினார்.

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்ட பிறகு, மது அருந்தக்கூடாது. அதாவது 2வது டோஸ் போடும் வரையில், அடுத்த 28 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது. அப்படிச் செய்யும்போதுதான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

தடுப்பூசி போட்ட 42 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். எனவே, முதல் டோஸ் போட்டுவிட்டோ, அல்லது குறுகிய காலத்திலோ, அநாவசியமாக வெளியே போகக்கூடாது. கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகிவிடக் கூடாது. அதேநேரம், கொரோனா தடுப்பூசி போடுபவர்களை தனிமைப்படுத்த வேண்டாம்.

loading...