ஜல்லிகட்டு போட்டிக்காக காளையை அழைத்துவந்த 2வயது சிறுமியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்று தமிழர் திருநாளாம் தை முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது., இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் காளை உரிமையாளர்கள் காளைகளைக் கொண்டு வந்திருந்தனர்.
இப்போட்டியில் 430 மாடு பிடிவீரர்களும், 840 காளைகளும் பங்கேற்க உள்ளனர். மேலும் சுற்றுக்கு 50 வீரர்கள் என களமிறங்கவுள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக அவனியாபுரம் மேலத்தெருவை சேர்ந்த உதயா என்ற 2வயது சிறுமிகுருநாதர் என்ற கிராமத்திற்கு சொந்தமான காளையை வாடிவாசலில் அவிழ்த்துவிடுவதற்காக அழைத்துவந்துள்ளார்.