மனைவியிடம் தனிமையில் இருக்கும்போது மாட்டிக்கொண்ட கணவன்; பின்பி நடந்த பரபரப்பு சம்பவம்!

Report
573Shares

சென்னை ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர்(29). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் மேட்ரிமோனி மூலம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பாக 50 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணம் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குடும்ப வாழ்க்கையை தொடங்கிய ராஜசேகர் திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே தன் மனைவியுடன் சந்தோஷமாக இருப்பதில் ஈடுபாடு காட்டாமல் இருந்துவந்துள்ளார்.

இதனால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து ஒருகட்டத்தில் அவர் தனது மனைவியுடன் நெருங்கி வாழ ஆரம்பித்துள்ளார்.

அப்போதுதான் இத்தனை நாட்களாக ராஜசேகர் செய்துவந்த பித்தலாட்டம் தெரியவந்துள்ளது. ஒருநாள் மனைவியுடன் நெருக்கமாக இருக்கும்போது ராஜசேகரின் தலையில் இருந்த விக் கழண்டுவிழுந்துள்ளது.

மேலும், வழுக்கை தலையை மறைத்து, ராஜசேகர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டது அவரது மனைவிக்கு தெரியவந்துள்ளது.

இதன் பின்னர், கணவன் மனைவி இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு அவ்வப்போது சண்டை வந்துள்ளது.

மேலும், மனைவி வீட்டார் வரதட்சணையாக கொடுத்த நகைகளை வங்கியில் வைத்திருப்பதாக கூறி ஏமாற்றி ராஜசேகர் அவற்றை விற்று செலவு செய்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், தன்னை பற்றிய உண்மை தெரியவந்ததால் அவர் தனது மனைவியை அடித்து துன்புறுத்த தொடங்கியுள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த அந்த பெண் போலியான புகைப்படத்தை மேட்ரிமோனியில் பதிவிட்டு தன்னை திருமணம் செய்தது, தனது நகைகளை விற்றது,..

தன்னை அடித்து கொடுமை செய்வது குறித்து கடந்த 2015-ம் ஆண்டு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இரண்டு வீட்டாரிடமும் இத்தனை ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த சமரசமும் ஏற்படாத நிலையில் தற்போது 498(ஏ)- கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினரால் பெண்ணிற்கு இழைக்கப்படும் கொடுமைகள், 406- நம்பிக்கை

மோசடி ஆகிய பிரிவின் கீழ் அந்த பெண்ணின் கணவர் ராஜசேகர், ராஜசேகரின் தாயார் ஜெகதா, தந்தை ஜெகநாதன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

loading...