74 முறை நல்லபாம்பிடம் கடி வாங்கிய நபர்.. விடாமல் பல ஆண்டுகளாக துரத்தும் அதிர்ச்சி சம்பவம்

Report
624Shares

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கும்மரகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(37). இவரை 5 வது வயதில் முதல் முறையாக ஒரு நல்ல பாம்பு கடித்துள்ளது.

அப்போது, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற சுப்ரமணியம் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

ஆனாலும், அந்த நல்லபாம்பு இவரை இதுவரை விடுவதாக இல்லை. 5 வயதில் இருந்து தற்போதுவரை சுப்பிரமணியத்தை 74 முறை நல்லபாம்பு கடித்துள்ளது.

இதனால், சுப்ரமணியம் வீட்டில் இருந்து வெளியில் வரவே அச்சப்படுகிறார். சரி, சொந்த ஊரில் இருந்தால்தான் இந்த பிரச்சனை என்று, பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களுக்கு வேலைதேடி சென்றுள்ளார் சுப்ரமணியம். ஆனால் அங்கும் அவரை நல்லபாம்பு கடித்துள்ளது.

இதனால் மீண்டும் சொந்த ஊருக்கே வந்துவிட்ட சுப்ரமணியம் வெளியில் வந்தால் பாம்பு கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்துவருகிறார்.

மேலும், ஒவ்வொரு முறை பாம்பு கடிக்கும்போதும் பல ஆயிரம் மருத்துவ செலவு ஆவதாக வருத்தப்படும் சுப்ரமணியம் தான் பிழைப்பு நடத்துவதற்கு அரசு ஏதாவது உதவு செய்யவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

நல்ல பாம்புகள் மட்டுமே சுப்பிரமணியத்தை கொத்துவதும், அவரை பின்தொடர்வதும் ஏன் என்ற காரணம் பலரையும் குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

You May Like This Video