திருமண மண்டபத்துக்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்.. வாயடைத்துபோன ஊர்மக்கள்

Report
1099Shares

துமகூரு மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் பலராம் மற்றும் மனைவி ரமாதேவி. இவர்களுக்கு, மகன் நிரூப் என்ற மகன் உள்ளார். சொந்தமாக அரிசி ஆலை நடத்தி வருகிறார்.

நிரூப்புக்கும், பெங்களூரு தலகட்டபுரா அருகே வசிக்கும் கிஷோர், மாதவி தம்பதியின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இவர்களது திருமணம் டிசம்பர் 1-ந் தேதி நடத்துவது என்று 2 வீட்டு பெற்றோரும் முடிவு செய்திருந்தார்கள். இதற்கான ஏற்பாடுகளை மணமகன், மணமகள் வீட்டார் செய்து வந்தனர்.

இந்நிலையில், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நேற்று காலையில் துமகூருவில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டரில் மணமகன் நிரூப் தனது குடும்பத்தினருடன் தலகட்டபுராவில் உள்ள திருமண மண்டபத்திற்கு பறந்து வந்துள்ளார்.

இதைக்காண, ஏராளமான பொதுமக்கள் மண்டபத்தின் முன்பாக திரண்டு இருந்தார்கள்.

துமகூருவில் இருந்து பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்த நிரூப்புக்கு, மணமகள் வீட்டார் உற்சாக வரவேற்பு அளித்து மண்டபத்திற்குள் அழைத்து சென்றனர். பின்னர் நிரூப், ஐஸ்வர்யாவின் திருமணம் கோலாகலமாக நடந்தது.

இதுகுறித்து, மணமகன் பேசுகையில், ‘எனது திருமணம் புதுவிதமாக இருக்க வேண்டும் என்று குடும்பத்தினர் விரும்பினார்கள்.

மணமகள் வீட்டிலும் இதையே தெரிவித்தனர். அதன்படி, துமகூருவில் இருந்து தலகட்டபுராவுக்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்தேன்.

இது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. எங்கள் குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனை என் வாழ்நாளில் மறக்க முடியாது,’ என கூறியுள்ளார்.

மேலும், இதுசம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

You May Like This Video