சில மணிநேரங்களில் வலுவடையும் புரெவி புயல்; எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

Report
477Shares

வங்க கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் தீவிரமடைந்த நிலையில் புயலாக மாறியுள்ளது.

இதற்கு, புரெவி என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் தென் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் பாம்பன் – குமரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும், பாம்பனிலிருந்து 530 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புரெவி புயல் 5 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகம், கேரள பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.