ஆடு உதைத்ததால் கீழே விழுந்து உயிரிழந்த மனைவி... தந்தையின் நாடகத்தை அம்பலப்படுத்திய இரு குழந்தைகள்

Report
612Shares

இளம்பெண் ஒருவரின் வயிற்றில் கணவர் எட்டி உதைத்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லத்தில் கரிக்கோம் என்ற ஊரை சேர்ந்த ஆஷா, வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆஷாவின் கணவர் மனைவி ஆடு மேய்க்கச் சென்ற தருணத்தில், ஆடு உதைத்ததால் பாறையிலிருந்து கீழே விழுந்துவிட்டதாக கூறிய நிலையில் கடந்த 4ம் திகதி பரிதாபமாக ஆஷா உயிரிழந்துள்ளார்.

மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறிய பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, விசாரணை மேற்கொண்டதில், கீழே விழுந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லை என்றும் பிரேத பரிசோதனையில் வயிற்றில் மட்டுமே காயங்கள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

பின்பு ஆஷாவின் இரு குழந்தைகளிடமும், கணவர் அருணின் தாயாரிடம் விசாரித்த போது, அருண் ஆஷாவை குடி போதையில் எட்டி உதைத்ததும், இதனால் மயங்கிவிழுந்ததும் தெரியவந்த நிலையில், அருணை தற்போது பொலிசார் கைது செய்துள்ளனர்.