நிவர் சூறாவளி காற்றால் குவிந்த தங்க மணிகள்: அள்ளிச்செல்ல ஓடிய மக்கள்

Report
2778Shares

நிவர் புயலின் சூறாவளி காற்றால் ஆந்திர கடற்கரையில் தங்க மணிகள் கிடந்ததால் மக்கள் படையெடுக்க தொடங்கினர்.

நிவர் புயலின் தாக்கம் ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் மற்றும் ராயலசீமா மாவட்டங்களிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளியன்று உப்படா தொரட பேட்டா ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரையில் ஒரு கிராம் மற்றும் 2 கிராம் மதிப்புள்ள தங்க மணிகள் மண்ணில் புதைந்திருந்ததை சில மீனவர்கள் கண்டெடுத்தனர்.

இந்த செய்தி காட்டுத்தீப் போல் பரவவே, ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்து தங்க மணிகளை தேடத் தொடங்கினர்.

சூறாவளி காற்றையும் பொருட்படுத்தாமல் தங்கத்தை வேட்டையாடியதாகவும், நால்வருக்கு மட்டும் சிறிதளவு தங்க மணிகள் கிடைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் புனித நீராடிய சிலர் தங்கத்தை நேர்த்திக் கடனாக கடலில் அர்ப்பணம் செய்ததாலும், சிலர் குளிக்கும் போது தவறி விழுவதில் அவர்களது தங்க நகைகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டதாலும், தற்போது புயல் காற்றில் அந்த தங்கமே கரை ஒதுங்கியிருக்கும் என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

You May Like This Video