வீடு முழுவதும் காணப்பட்ட புழுக்கள்... அவதானித்த அக்கம் பக்கத்தினருக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி

Report
2441Shares

செங்கல்பட்டு அருகே இறந்தவர் உடலை 4 நாட்களாக வீட்டில் வைத்திருந்ததை அடுத்து செங்கல்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், சென்னெரி ஊராட்சிக்குட்பட்ட பெரிய புத்தூர் கிராமம் உள்ளது. இங்கு நீஞ்சிலி அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் தாமோதரன் (62). இவர் ஜாதகம் கணிப்பது பஞ்சாங்கம் பார்ப்பது போன்ற தொழில் செய்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி சாரதா என்ற மனைவி இறந்துவிட்டதால் தனக்கு உதவியாக இருந்த திருச்சியை சேர்ந்த ராஜேஸ்வரியுடன் கடந்த 6 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன் தாமோதரனை அக்கம்பக்கத்தினர் சரியாக காணவில்லை.

அவ்வப்போது அருகில் விளையாடும் சிறுவர்களிடம் உணவு வாங்கிவர கூறியதால், யாருக்கும் சந்தேகம் வராமல் இருந்துள்ளது.

மேலும் தாமோதரன் எங்கே என்று கேட்டாலும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அனுப்பிவிடுவாராம். இந்நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம் ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது ராஜேஸ்வரி யாரையும் பார்க்கவிடாமல் துரத்தியுள்ளார். பின்பு அவரை தள்ளிவிட்டு பார்த்த அக்கம் பக்கத்தினருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தாமோதரன் இறந்து நான்கு நாட்கள் ஆன நிலையில், உடல் அழுகி வீடுமுழுவதும் புழுக்கள் காணப்பட்டுள்ளது.

பின்பு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ராஜேஸ்வரி கடந்த 3 ஆண்டுகளாக மனநிலை சரியில்லாமல் இருந்த நிலையில், இந்த சம்பவம் இயற்கை மரணமா அல்லது கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.