முதலிரவு நடக்கும் நேரத்தில் வந்த காதலி: அதிர்ச்சியடைந்த காதலன் பிடித்த ஓட்டம்.. பரபரப்பு சம்பவம்

Report
766Shares

சித்தூர் மாவட்டம் கங்கவரம், மிட்ட மீதகுரப் பள்ளியை சேர்ந்தவர் கணேஷ்(25). இவர், பெங்களுருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இதையடுத்து, அதே நிறுவனத்தில் வேலை செய்யும் சித்தூர் பெத்த பஞ்சானியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளாக காதல் தொடர்ந்துக் கொண்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் கணேஷுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தன் மிட்ட மீதகுரப் பள்ளிக்கு வந்த கணேஷ் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டும், சிகிச்சைக்கு பின் கொரோனாவிலிருந்து மீண்டும் உள்ளார்.

இதனைத்தொடர்ந்து, கணேஷின் வீட்டார் அவருக்கு பெத்தபஞ்சானி மண்டலம் அப்பனபள்ளியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர் .

ஆனால், இதற்கு மறுப்பேதும் சொல்லாத கணேஷ் திருமணமும் செய்துள்ளார். இந்த நிலையில், கணேஷின் நண்பர்கள் மூலம் தகவல் அறிந்த அவரது காதலி உடனடியாக பெங்களூருவில் இருந்து அவசரமாக மிட்டமீதகுரப் பள்ளிக்கு வந்து சேர்ந்துள்ளார்.

தன்னை 6 வருடம் காதலித்து திருமணம் செய்யாமல் ஏமாற்றிய கணேஷ் மீது கங்கவரம் மற்றும் பெத்தபஞ்சானி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தன் காதலரிடம் முறையிட அவரது வீட்டிற்கும் சென்றுள்ளார். ஆனால், அப்போது முதலிரவு நிகழ்ச்சியை நடவிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை வீட்டிற்குள் விடாமால் கணேசின் உறவினர்கள் இளம்பெண்ணை தாக்கியுள்ளனர்.

மேலும், காதலியின் வருகையை அறிந்த கணேஷ் தங்களை பிரித்து விடுவார்களோ என பயந்து முதலிரவு அறையிலிருந்து புதுமண தம்பதியினர் முதலிரவு நடக்கவிருந்த வீட்டிலிருந்து ஓடியுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பரபரப்பை ஏற்படுத்த போலீசார் விசாரணையை தொடர்ந்துள்ளனர்.

loading...