கொரோனாவால் உயிரிழந்த பிரபல நடிகர்... சோகத்தில் திரையுலகினர்

Report
1031Shares

குஜராத்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்த நரேஷ் கனோடியா கொரோனாவினால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 2020 ஆம் ஆண்டை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. காரணம் பல திறமையான கலைஞர்களை இழந்துள்ளோம். பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என அனைத்து திரையுலக ரசிகர்களும் தங்கள் மனம் கவர்ந்த சில பிரபலங்களை இழந்துள்ளனர்.

கொரோனா பீதி ஒரு பக்கம் என்றால், அடுத்தடுத்து மரணிக்கும் பிரபலங்களின் செய்தி திரையுலகினர் இடையே அதிர்ச்சியை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் குஜராத்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நரேஷ் கனோடியா என்பவர் கொரோனாவால் உயிரிழந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர் சிகிச்சையில் இருந்த நரேஷ் கனோடியா இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாஜகவில் தீவிரமாக இயங்கி வந்த இவரது மரணம் அக்கட்சியினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராஜசேகர் மற்றும் அவரது மனைவி ஜீவிதாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

loading...