லலிதா ஜூவல்லரி கொள்ளையன் சிறையில் திடீர் மரணம்.. வெளியான தகவல்

Report
762Shares

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருச்சியில் அமைந்திருக்கும் லலிதா நகைக்கடையில், சுவரை துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

அந்த கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க 7 தனிப்படை பிரிவுகள் அமைக்கப்பட்டன.

இந்த கொள்ளை சம்பவம் திருவாரூர் சீராத்தோப்பு பகுதியை சேர்ந்த முருகன், மணிகண்டன் மற்றும் முருகனின் அக்கா ஆகியோர் நடத்தியது தெரிய வந்தது.

முருகனை தீவிரமாக தேடி வந்த நிலையில் முருகனும் மணிகண்டனும் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கைதாகும் போதே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததால் முருகன் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் உடல்நலம் மிகவும் மோசமானதால் அவர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

loading...