சாமியாரால் ஏற்பட்ட சூறாவளி... இறுதியில் நொறுங்கிப் போன குடும்பம்! நடந்தது என்ன?

Report
654Shares

பில்லி சூனியத்திலிருந்து காப்பாற்றுவதாக, நோயால் அவதிப்படும் குடும்பத்தினரிடம் கூறி நம்ப வைத்த போலி சாமியார் சிக்கியுள்ளார்.

ஒரு சாமியாரை நம்பி தான் பிழைப்புக்கு ஓட்டி வந்த மினி வேனை விற்று சென்னையை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராஜகுமாரன் என்பவர் சென்னையில் மகேந்திரா லோடு வேன் ஓட்டி வந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு மீனாட்சிபுரத்தில் இருந்து புளியங்குடி சென்று அங்கு சாலையோரத்தில் அமர்ந்திருந்த சாமியாரைப் பார்த்து உடல்நிலை சரியில்லாததை சோகமாக கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட சாமியார் ராஜகுமாரனுக்கு பில்லி சூனியம் வைத்திருப்பதாகவும், இதனை சரி செய்ய 2 லட்சம் ரூபாயும், 2 கோழியும் எடுத்துக்கொண்டு சென்னைக்கு வருமாறு கேட்டுள்ளார்.

சற்றும் யோசிக்காத ராஜகுமாரன் தான் பிழைப்புக்கு ஓட்டி வந்த மனி வேனை 5 லட்சத்திற்கு விற்று நண்பர் ஒருவரின் கார் மூலம் சென்னைக்கு சென்று அங்கு பணத்தினையும், கோழியையும் கொடுத்துள்ளார்.

இதனைப் பெற்றுக்கொண்ட சாமியார் யுவராஜ் பூஜைக்கு பொருட்கள் வாங்கிவருவதாக கூறி எஸ்கேப் ஆனதையடுத்து, பின்பு தான் ராஜகுமாரனுக்கு தான் ஏமாந்தது தெரியவந்துள்ளது.

பின்பு காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, யுவராஜுடன் அவருடைய காதலி ஜெயந்தி, காசிமேடு பாப்பா, அரக்கோணம் சுரேஷ், மதுரை அமர்நாத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கோழிகள் உள்ளிட்டவற்றை பொலிசார் பறிமுதல் செய்தனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். எனினும் தப்பி ஓடிய யுவராஜை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

loading...