வெறும் வெள்ளை துணியுடன் புதுமணத்தம்பதியின் போட்டோ ஷூட்: கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

Report
2026Shares

கேரளாவை சேர்ந்த புதுமணத்தம்பதியினரின் போட்டோ ஷூட் வைரலாக சமூகவலைத்தளங்களில் கண்டனங்களை குவித்து வருகிறது.

கேரளாவை சேர்ந்த தம்பதியினர் ஹிருஷி கார்த்திகேயன்- லட்சுமி, கடந்த செப்டம்பர் 16ம் தேதி கொரோனா ஊரடங்கில் சொந்த பந்தங்களுடன் திருமணம் செய்து கொண்டனர்.

கொரோனா பரவல் காரணமாக Pre Wedding Shoot நடத்த முடியாமல் போனதால், தற்போது Post Wedding Shoot நடத்தில் தங்களுடைய பேஸ்புக்கில் பகிர்ந்தனர்.

அதில், மணப்பெண் உடலில் வெள்ளை போர்வைபோல் மெலிதான உடையை அணிந்துகொண்டு தேயிலைத்தோட்டங்களில் கணவருடன் ஓடியாடும் காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தங்கள் தரப்பு விளக்கத்தை பேட்டியளித்துள்ளனர்.

The News Minuteக்கு அவர்கள் அளித்த பேட்டியில், பெரும்பாலானவர்கள் வேஷ்டி- சட்டை மற்றும் சேலையுடன் கோவிலை சுற்றி வந்து போட்டோ ஷூட் நடத்துவார்கள்.

சற்று வித்தியாசமாக எடுக்க நினைத்து இப்படியொரு போட்டோ ஷூட் நடத்தினோம், என்னுடைய குடும்ப நண்பரான அகில் கார்த்திகேயன் கொடுத்த ஐடியா எங்களுக்கு பிடித்திருந்தது.

நாங்கள் ஆடை அணிந்துகொண்டுதான் போட்டோஷூட் செய்தோம். எப்படி ஆடை அணியாமல் வாகமன் போன்ற சுற்றுலா தளத்தில் போட்டோ ஷூட் செய்யமுடியும்?

இது முழுக்க எங்கள் புகைப்படக்காரரின் அழகியல் மற்றும் படைப்பாற்றல் திறமை சார்ந்தது. இது தெரியாமல், பேஸ்புக்கில் பலர் என்னையும் என் மனைவியையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.

ஒரு சிலர் பாராட்டினாலும் பெரும்பாலும் மோசமான கமெண்டுகளே வந்தன, ஆனால் எங்கள் வீட்டில் இந்த போட்டோ ஷூட் பற்றி யாரும் கவலைப்படவில்லை. ஆனால், மனைவி லட்சுமியின் வீட்டில் வருத்தப்பட்டார்கள்” என்கிறார் ஹிருஷி கார்த்திகேயன்.

புதுப்பெண்ணான லட்சுமி கூறுகையில், ஒரு பெண் கழுத்து மற்றும் கால்கள் தெரியும்படி உடை அணிந்திருந்தால் அது நிர்வாணம் கிடையாது.

ஆரம்பத்தில் வந்த கமெண்டுகளுக்கு நாங்கள் பதிலளித்துக் கொண்டிருந்தோம், ஒரு கட்டத்தில் புகைப்படங்கள் வைரலாக ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன, எனவே அதை புறக்கணிக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களை தாண்டி, தூரத்து உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டுக்காரர்கள் பெற்றோர்களிடம் புகாரளிக்க தொடங்கியதையும், நான்கு சுவற்றுக்குள் செய்ய வேண்டியதை இப்படியா பொதுவெளியில் காட்டுவது? என விமர்சிக்கத் தொடங்கிவிட்டதையும் குறிப்பிட்டுள்ளார் லட்சுமி.

எனினும் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கும் என்பதை புரிந்து கொண்ட பெற்றோர், விமர்சனங்களை ஓரங்கட்ட முடிவு செய்தார்களாம்.

மேலும் தற்போது வரை பேஸ்புக்கில் இருந்து புகைப்படங்களை நீக்காமல் இருக்கும் புதுமண தம்பதியினர், யாருக்கு எதிராகவும் போலீசில் புகாரளிக்கப் போவதில்லை என்கின்றனர்.