எஸ்பிபி அடக்கம் செய்யப்பட்ட பண்ணை வீட்டின் தற்போதைய நிலை

Report
2225Shares

நேற்றைய தினத்தில் பாடகர் எஸ்பிபியின் உடலை அடக்கம் செய்வதற்கு ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த வேளையில், தற்பொது அந்த இடம் யாருமில்லாமல் வெறிச்சோடி இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கொரோனாவில் இருந்து மீண்ட பாடகர் எஸ்பிபியின் உடல் உறுப்புகள் பழுதாகி பெரும் சிரமத்துடன் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை இறந்த நிலையில், நேற்று அவரது உடல் அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க, ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் பிரியா விடைபெற்றுள்ளார். மேலும் அவர் அடக்கம்பண்ணப்பட்ட இடத்தில் நேற்று ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மற்றும் பிரபலங்கள் என காணப்பட்டிருந்தது.

தற்போது நேற்றைய தினத்தில் அவரை அடக்கம் பண்ணப்பட்ட இடத்தில் யாருமில்லாமல் வெறிச்சோடி இருக்கின்ற புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.