இசையால் தூங்க வைத்த எஸ்பிபி... நிரந்தரமாக தூங்கிப் போன சோகம்! குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்

Report
2222Shares

'பாடும் நிலா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்(74) நேற்று காலமானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பி.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி.பி அனுமதிக்கப்பட்டார்.

வியாழக்கிழமை மாலை முதல் அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. அவருடைய மறைவு இந்தியத் திரையுலகினரையும் அவரது ரசிகர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபலங்கள் அரசியல் ஆளுமைகள் உட்பட பலரும் அவருக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்த நிலையில், 24 பொலிசார் 3 முறை குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை செய்யப்பட்டு, குண்டுகள் முழங்க எஸ்பிபியின் உடல் பொன்னேரி அருகே தாமரைப்பாக்கத்தில் உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

loading...