நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி அருகே சென்ற கணவர்... அடுத்தடுத்து நடந்த துயரம்

Report
7797Shares

நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் அறைக்குச் சென்ற கணவர், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன்(42). தேங்காய் வெட்டும் தொழில் செய்து வரும் இவரது மனைவி தங்கம்(37). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிய நிலையில், ராகுல்(11) என்ற மகனும் தனுஷியா(10) என்ற மகளும் உள்ளனர்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த ராஜசேகர், தற்போது கொரோனா காலம் என்பதால் எந்த வேலையும் இல்லாமல் இருந்துள்ளார். அவ்வாறு சில வேலைகள் செய்தாலும், அதனை குடித்து காலி செய்துவிடுவாராம்.

இதனால் தம்பதிக்குள் மேலும் பிரச்சனை அதிகமாகியபடியால், குடும்பம் வறுமையில் தவித்ததால், தங்கம் வேலைக்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.

மனைவி வேலைக்கு செல்வது பிடிக்காததால், இருவருக்கும் இடையே அதிகமாக சண்டை எழுந்துள்ளது. எனினும் பிள்ளைகளுக்கு சாப்பாட்டு செலவு, வீட்டுச்செலவை சமாளிக்க சில நாட்களாக அந்த பகுதியில் உள்ள ஒரு முந்திரி ஃபேக்டரிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

சம்பவத்தன்று வேலைக்கு போய்விட்டு தங்கம் வீட்டுக்கு வந்து, பிள்ளைகளுடன் அமர்ந்து பேசிவிட்டு இருந்துள்ளார். அப்போது தள்ளாடி கொண்டே ராஜசேகரன் வந்த மீண்டும் சண்டையை ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் தூங்கிவிட்டாராம்.

ஆனால் நடுராத்திரி திடீரென விழித்த போது, அறையில் தூங்கிக்கொண்டிருந்த தங்கத்தை பார்த்து மீண்டும் கோபமடைந்துள்ளார். விடிந்ததும் வேலைக்கு சென்றுவிடுவாளே என்ற நினைப்பில், தேங்காய் வெட்டும் அரிவாளால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்பு பதட்டத்தில் மற்றொரு அறைக்குச் சென்று, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு விழித்து பார்த்த குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பின்பு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்பு இரண்டு பேரின் சடலங்களையும் பொலிசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.