மருமகனுடன் இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாமியார்... மருமகனை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ! பகீர் சம்பவம்

Report
2308Shares

மருமகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற 45 வயதான மாமியார் ஒருவரை கும்பல் ஒன்று வன்புணர்வு செய்துள்ள சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தினைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் தனது மருமகனுடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அப்பொழுது 6 பேர் கொண்ட கும்பல் பைக்கை தடுத்து நிறுத்தியதோடு, மருமகனே அருகே கட்டிப்போட்டுவிட்டு அப்பெண்ணை வன்புணர்வு செய்து காணொளி எடுத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தினைக் குறித்து பொலிசாரிடம் கூறிவிடக்கூடாது என்பதற்காக மருமகனை மாமியாரிடம் வண்புணர்வு செய்ய முயற்சி செய்வது போன்று வற்புறுத்தி அதனையும் காணொளியாக எடுத்துள்ளனர்.

இந்த 6 பேர் கொண்ட கும்பலில் இரண்டு பேர் பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. குறித்த கும்பல் தப்பிய நிலையில் இதனைக் குறித்தும், பொலிசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.

ஆனால் குறித்த கும்பலோ தாங்கள் எடுத்த காணொளியினை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டதால், பின்பு மன உளைச்சலுக்கு ஆளான பெண் பொலிசில் புகார் அளித்த பின்பே இந்த சம்பவம் வெளிவந்துள்ளது.

பொலிசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளில் மூன்று பேரை கைது செய்துள்ளதுடன் மற்ற குற்றவாளிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.