மீனைப் போல மசாலா போட்டு சமையல்... இறுதியில் வலைவீசும் பொலிசார்! சாப்பிட்டது என்ன தெரியுமா?

Report
648Shares

மேட்டூர் அருகே பாம்பை வெட்டி சமையல் செய்து சாப்பிட்ட இளைஞர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தங்காபுரிபட்டினம் பகுதியில் இளைஞர்கள் 4 பேர் சேர்ந்து 6 அடி நீள பாம்பு ஒன்றை மீன் போல வெட்டி சமையல் செய்து சாப்பிட்டுள்ளனர்.

அத்துடன் அதை காணொளியாக எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்ப, அந்த வீடியோ அப்பகுதியில் வைரலாகியுள்ளது.

இதையடுத்து சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளியே வர, அந்த 4 இளைஞர்களையும் வனத்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.