வராண்டாவில் அமர்ந்திருந்த மகன்... கையில் சுத்தியலுடன் வந்த தந்தை! பகீர் காட்சி

Report
700Shares

சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை தந்தையே சுத்தியாதலால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம், பெந்துர்த்தி அருகே சின்னமுஷிடிவாட சத்யநகரில் பகுதியில் வசித்து வருபவர் போரிபதி வீரராஜு. தற்போது 72 வயதாகும் வீரராஜு கடற்படையில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளநிலையில் மூவருக்கும் திருமணம் செய்துவைத்துவிட்டு ஜலராஜு என்ற மகனுடன் வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் வீரராஜு மற்றும் அவரது ஜலராஜுகும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டைபோட்டுக்கொண்டதாக தெரிகிறது. இப்படியே நாட்கள் செல்ல செல்ல தனது மகன் ஜலராஜுவை கொலை செய்ய முடிவு செய்துவிட்டார் தந்தை வீரராஜு.

இந்நிலையியல் சம்பவத்தன்று ஜலராஜு வராண்டாவில் அமர்ந்திருந்தபோது அவருக்கு பின்னால் சுத்தியலுடன் வந்த அவரது தந்தை வீரராஜு கையில் வைத்திருந்த சுத்தியலால் மகனை நான்குமுறை கொடுமையாக தாக்கியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் நிலைகுலைந்து கீழே விழுந்த ஜலராஜு தலையில் இருந்து இரத்தம் கசிந்தநிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

ஆனால் மருத்துவமனையை சேர்வதற்கு முன்னதாகவே ஜலராஜு உயிரிழந்தார். இதனிடையே தனது மகனை கொலை செய்துவிட்டதாக வீரராஜு அந்த பகுதி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதனை தொடர்ந்து உயிரிழந்த ஜலராஜு மனைவி ஈஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் வீரராஜு மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கீழே பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ காட்சியில் வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் அதை மனதில்கொண்டு பார்க்குமாறு அறிவுறுத்திக்கிறோம்.

காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...