தாய்க்கு டீ போட்டுக்கொடுக்காத மனைவி... மிளகாய் பொடியை வைத்து அரங்கேறிய கொடுமை!

Report
432Shares

தன் தாய்க்கு டீ போட்டு தராததால் மனைவியின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை போட்டு கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தில் சபர்மதி பகுதியில் வாழும் 23 வயது பெண்மணி ஒருவர் ஷீதலா சதாம் நாளன்று சமைக்காததால் தன் கணவரும், மாமியாரும் அடித்து துன்புறுத்தி மிளகாய்ப்பொடி தூவி கொடுமை செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வடமாநிலங்களில் ஷீதலா சதாம் என்னும் இந்து பண்டிகையை கடைபிடிக்கும் வழக்கத்தை சிலர் கொண்டுள்ளனர். பக்தர்கள் இந்த நாளில் சமையலறையில் நெருப்பைப் பயன்படுத்துவதில்லை. எனவே, அதற்கு முந்தைய நாளிலேயே தேவையான உணவை தயாரித்து வைத்து கொள்வர்.

இந்நிலையில், பொலிசாரின் விசாரணையின் போது, கடந்த திங்கள்கிழமை ஷீதலா சதாம் நாளன்று புகார் அளித்த பெண்மணி வீட்டில் ஏதும் சமைக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் அவரது மாமியார் டீ போட்டு தருமாறு கேட்டுள்ளார். ஷீதலா சாதத்தை முன்னிட்டு வீட்டில் அடுப்பு பற்றவைக்க கூடாது என கூறி மாமியார் மருமகள் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமியார் அவரது மகனிடம் சொல்லி மருமகளை அடிக்குமாறு தூண்டியுள்ளார்.

அதன்பின் பாதிக்கப்பட்ட பெண்மணி வீட்டை விட்டு வெளியேறி, தங்கள் வீட்டின் அருகிலுள்ள ஒரு தேநீர் கடைக்கு டீ வாங்க சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற கணவரும் மாமியாரும் சாலையிலேயே அந்தப்பெண்ணை கல்லால் தாக்கி வீட்டிற்கு இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அதையடுத்து தாய் கொடுத்த குச்சியை கொண்டு மனைவியை கண்முன் தெரியாமல் தாக்கியுள்ளார். மேலும் மனைவியின் அந்தரங்க பாகங்களில் மிளகாய் தூள் போட்டபின் கொடூரமாக அடித்து வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்குமுன்பு ஏற்பட்ட சண்டையில் சில நேரங்களில் பெற்றோர் வீட்டுக்கு சென்றதாகவும், ஆனால் வேறுவழியின்றி ஒவ்வொரு முறையும் மீண்டும் கணவர் வீட்டிற்கு திரும்பியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.