உன் மனைவியின் அந்த போட்டோவை அனுப்பு... அதிர்ந்துபோன கணவர்.. புதுமாப்பிள்ளையின் லீலை!

Report
507Shares

இணையத்தளப்பக்கங்களில் பெண்களின் போட்டோகளை மார்பிங் செய்து மிரட்டுவதற்கு என்றே பல கும்பல்கள் உள்ளது. இதனால் காவல்துறையினரும் பல எச்சரிக்கை பெண்களுக்கு பதிவிட வேண்டாம் என கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், 29 வயது இளைஞர் தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

இதைக்கண்ட ஆசாமி ஒருவர் மனைவியின் புகைப்படத்தை மட்டும் எடுத்து மார்பிங் செய்து முகநூலில் ஒரு பக்கத்தில் பதிவு செய்து இருக்கின்றார், இதுகுறித்து தகவல் அறிந்த அவர்கள் விசாரித்து அந்த பக்கத்தின் அட்மினை கண்டறிந்து புகைப்படத்தை நீக்குமாறு தெரிவித்துள்ளனர்.

அதனை நீக்கிவிட்டு அந்த ஆசாமி வேறு ஒரு பக்கத்தில் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை போட்டுள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த கேட்ட அவர்கள் மீண்டும் அந்த ஆசாமி உடன் பேச உனது மனைவியின் புகைப்படங்களை எனக்கு அனுப்பு இல்லையென்றால் இன்னும் மோசமாக மார்பிங் செய்து முகநூலின் எல்லா பக்கங்களிலும் போட்டு விடுவேன் என்று கூறியுள்ளார்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞர் போலீசில் புகார் அளிக்க சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போலீசார் அந்த ஆசாமியை கண்டு பிடித்தபோது, அவர் இரண்டு மாத புது மாப்பிள்ளை என்பது தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.