வயிறுவலியால் துடிதுடித்து 16 வயது சிறுவன் மரணம்... பெற்றோர்களே உங்களது குழந்தைகள் மீது கவனம்

Report
711Shares

ஆந்திர பிரதேசத்தில் ஊரடங்கு காலம் என்பதால் மொபைல் போனில் கேம் விளையாடிய 16 வயது சிறுவன் துடிதுடிக்க இறந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த 16 வயது சிறுவன், ஊரடங்கு சமயங்களில் தனது அதிக நேரத்தை மொபைல் கேமான 'பப்ஜி' விளையாடி செலவழித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தொடர்ந்து ஒரு நாள் முழுவதும் தண்ணீர், உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து விளையாடியுள்ளதால், உடம்பில் நீரிழப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமாகியுள்ளது.

உடனடியாக பெற்றோர் சிறுவனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது.

ஆனால் சிறுவன் கடும் வயிற்று வலியால் துடிதுடித்த சில மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முன்னதாக, இதே போல சிறுவன் ஒருவன், தொடர்ந்து பப்ஜி கேம் ஆடிய நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல மற்றொரு சிறுவன், பப்ஜி கேமுக்கு வேண்டி தனது தந்தையின் வங்கி கணக்கில் இருந்து 16 லட்சத்தை செலவழித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மொபைல் கேம்களில் உள்ள ஆபத்தை உணராமல், தொடர்ந்து இது போன்ற செயல்களில் சிறுவர்கள் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.