ஆசை ஆசையாய் கட்டிய புதிய வீட்டுக்குள் இறந்த மனைவியை விருந்தினராக அழைத்து வந்த கணவர்! இன்ப அதிர்ச்சியில் பிரமித்து போன மகள்கள்

Report
2746Shares

முதுமையில் வரும் தனிமையில் கணவனும், மனைவியும் சேர்ந்து கடந்த கால நிகழ்வுகளை அசை போடுவது என்பது ஒரு அலாதியான இன்பம்.

கணவன், மனைவி உறவு என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று.

அதே நேரத்தில் கணவனோ, மனைவியோ திடீரென இறந்து விட்டால் அந்த மீளா துயரிலிருந்து மீள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

அது போன்ற சம்பவம் தான் இது. கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே உள்ள கொப்பல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவரின் மனைவி திடீரென சாலை விபத்தில் இறந்து விட்டார்.

சில வருடங்களுக்கு முன்பு நடந்த மனைவியின் பிரிவை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

இந்நிலையில் கிருஷ்ணா ஆசை ஆசையாய் கட்டிய வீட்டிற்குப் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த அழகான நிகழ்வைப் பார்க்கத் தனது மனைவி இல்லையே என ஏங்கிய அவர், மனைவியின் பங்கேற்பும் இருக்க வேண்டும் என முடிவு செய்தார்.

இதையடுத்து மனைவியின் உருவம் போன்ற மெழுகு சிலையை வடிவமைத்து புதுமனை புகுவிழா நடத்தியுள்ளார்.

இந்த சிலையை, உற்றார் உறவினர் பிரமிப்போடு பார்த்துச் சென்றனர். அதனை பார்த்து கண் கலங்கிய தந்தையை அவரது மகள்கள் தேற்றியுள்ளனர்.