விமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி! நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்

Report
10810Shares

இது அகிலேஷ் அல்ல. அவர் இறக்கவில்லை என விமானி அகிலேஷ் ஷர்மாவின் உடலைப் பார்த்து அவரது நிறைமாத கர்ப்பிணியான மனைவி கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

கோழிக்கோட்டில் ஏர் இந்தியா விமான விபத்தில் விமானத்தைச் செலுத்தி வந்த கோ பைலட் அகிலேஷ் ஷர்மா பலியான செய்தியை அவரது மனைவி மேகாவிடம் சொல்லாமல் குடும்பத்தினர் ரகசியம் காத்து வந்தனர். நிறைமாத கர்ப்பிணியான மேகாவுக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் குழந்தை பிரசவத்திற்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது என்பதால் இந்த கணத்த முடிவை எடுத்தனர்.

ஆனால், மேகாவுக்கு தனது கணவர் இறந்துபோன விஷயம் தெரியவரவே, சுய நினைவு இழந்தது போல் காணப்பட்டுள்ளார். அகிலேஷ் ஷர்மாவின் உடல் கொச்சியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுராவில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அப்போது தனது கணவர் உடல் வைக்கப்பட்ட பெட்டியைப் பார்த்து யார் இவர் எனக் கதறி அழுதது அனைவரது நெஞ்சையும் பிளப்பதாக இருந்தது. தனது கணவர் இறந்து போனதை நம்பமுடியாமல் அழுது புலம்பினார் மேகா.

"இது அகிலேஷ் அல்ல. இருக்க முடியாது. நான் பிரசவம் பார்க்கவுள்ள மருத்துவமனையில் அகிலேஷ் இருக்கிறார். நான் அங்கே போக வேண்டும்" என அழுது அடம்பிடித்தார் மேகா.

அவரது உறவினர்கள் மேகாவை தேற்றி கணவர் இறந்த விஷயத்தை புரிய வைத்தனர். மருத்துவ குழு ஒன்று மேகாவின் உடல்நிலையை கண்காணித்தப்படி உள்ளனர்.

அகிலேஷ் ஷர்மாவின் மைத்துனர் விஜய் கூறும்போது, "ஆகஸ்ட் 21 முதல் மனைவியை உடனிருந்து கவனிப்பதற்காக அகிலேஷ் விடுப்பு கோரியிருந்தார். நாங்கள் அவரை கடைசியாக வீடியோ காலில் பார்த்தோம்" என்றார். இச்சம்பவம் அனைவரையும் கண்ணீர் கடலில் மூழ்கடித்துள்ளது.