தனுஷ்கோடியில் உள்வாங்கிய கடல்நீர்:... அடுத்து நிகழ்ந்த அதிசயம்

Report
11130Shares

ராமேஸ்வரத்தின் தனுஷ்கோடியில் நேற்று கடல் உள்வாங்கியதால் திடீரென சாலை போன்று மணல் பரப்பு உருவான காட்சி பார்ப்பதற்கு ரம்மியமாய் காட்சியளித்தது.

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியில் பலத்த காற்று வீசி வருவதுடன் ஆங்காங்கே மழைப்பொழிவும் இருந்து வருகிறது.

இதேபோன்று தனுஷ்கோடியின் கடைகோடி பகுதியான அரிச்சல்முனையில் கடல்சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது.

ஆனால் வடக்கு கடலான பாக்ஜலசந்தியில் சீற்றம் ஏதும் இல்லாமல் குளம் போல காட்சியளிக்கிறது.

இந்தநிலையில் நேற்று பல அடி தூரத்திற்கு கடல் திடீரென உள்வாங்கி மணல் பரப்பாக காணப்பட்டது. இதனால் பலவகை சிப்பிகளும் மணல் பரப்பில் வெளியே தெரிந்தன.

அதாவது கடலின் நடுவே புதிதாக மணல் சாலை உருவான போன்று பார்க்கவே ரம்மியமாய் காட்சியளித்தது.

தொடர்ந்து நேற்று மாலையே 4 மணியளவில் கடல் நீர் சகஜ நிலைக்கும் திரும்பியது.