கஞ்சாவுடன் சிக்கிய வனிதா... 3 கிலோவைக் கைப்பற்றிய பொலிசார்!

Report
924Shares

சென்னையில் உணவு டெலிவரி செய்வது போல கஞ்சா விற்பனை செய்த வனிதா(32) என்ற பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கிண்டி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்ய வந்த பெண் மீது சந்தேகம் எழுந்த நிலையில் அவரை சோதனையிட்டுள்ளனர்.

அப்போது அந்தப் பெண்ணின் உணவு டெலிவரி செய்யும் பையில் சுமார் 3 கிலோ கஞ்சா இருந்துள்ளதையடுத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், குறித்த பெண் தனது பெயர் வனிதா என்றும் மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர், பகுதி நேர கால் டாக்சி டிரைவராகவும், உணவு டெலிவரி செய்யும் வேலையிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவ்வாறு உணவு டெலிவரி செய்கையில் கஞ்சாவை மறைத்து கொண்டு சென்றால் பொலிசாருக்கு சந்தேகம் வராது என்பதால் இவ்வாறு செய்துள்ளார்.

இவருக்கு பழக்கமான ஒரு பெண்ணாலேயே கஞ்சா சப்ளை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறியுள்ளார்.