கணவரை வாழை இலை அறுக்க அனுப்பிவிட்டு வீட்டில் குழந்தையின் கழுத்தை அறுத்த தாய்! நடந்தது என்ன?

Report
702Shares

திருவண்ணாமலையில் தாய் ஒருவர் தனது 6 வயது குழந்தையை கழுத்து அறுத்துகொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்துள்ள கிராமம் கீழ்சிறுப்பாக்கத்தில் வசித்துவரும் தம்பதி கலையரசன் மற்றும் சுகன்யா(28). இவர்களுக்கு நிவேதா(6) என்ற பெண் குழந்தையும் உள்ளது.

கடந்த வருடம் கலையரசனின் அம்மா திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை சுகன்யா தான் முதல் முதலாக அவதானித்துள்ளர். அன்றிலிருந்து அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.

சில தருணங்களில் நன்றாக இருக்கும் சுகன்யா, திடீரென உணர்ச்சிவசப்பட்டு சத்தம் போடுவதோடு மாமியார் தன்னை வா வா என்று கூப்பிடுவதாக கூறி வந்துள்ளார்.

இதனால் மனைவியை சற்று கவனமாகவே அவதானித்து வந்த கலையரசன், கடந்த ஆடி 18ம் பெருக்கு அன்று தனது மனைவி தூக்கிட்டு இறந்த மாமியாருக்கு படையல் போடுவதற்கு வாழை அறுப்பதற்கு கூறியுள்ளார்.

கணவர் சென்ற சிறிது நேரத்தில் ஆக்ரோஷமாக மாறிய சுகன்யா தனது குழந்தையை சுவற்றில் இடித்து, குளியலறைக்கு இழுத்துச்சென்று அரிவாள்மனையால் குழந்தையையும் வெட்டி, தானும் தற்கொலைக்கு முயன்று ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

சுகன்யா தாக்கிய மறுநிமிடமே குழந்தை உயிரிழந்த நிலையில், சுகன்யாவும் மயக்கமாக கிடந்துள்ளார். வாழை இலை அறுத்து வந்த கலையரசன் பாத்ரூமில் அவதானித்த போது பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்பு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தையின் சடலத்தினை பிரேத பரிசோதனைக்கும், சுகன்யாவை மருத்துவமனையிலும் அனுமதித்து அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் சுகன்யா இருந்து வரும் நிலையில், கலையரசனின் பொறுப்பில்லாத செயலை நினைத்து பலரும் வேதனைப்பட்டு வருகின்றனர்.