லாக்டவுனில் பல மாதங்களாக வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட கார்... பின்பு அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

Report
1060Shares

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் கொரோனவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக தமிழகத்தில் பல கட்டங்களாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரசு என்பவர் சென்னையில் கார் ஓட்டும் தொழில் செய்து வந்துள்ளார். கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தியதால் அவர் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். ஊரடங்கு நீண்ட நாட்களாக நீடிக்கப்பட்டதால் வாடகை வீட்டின் உரிமையாளர் வாடகை பணம் கேட்டு தொல்லை செய்ததால், வீட்டையும் காலி செய்து சொந்த ஊருக்கே பொருட்களை எடுத்துச்சென்றுள்ளார்.

இந்தநிலையில் அவரது காரை தார்பாய் போட்டு மூடியபடி வீட்டின் முன்பே நிறுத்தியுள்ளார். கார் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தி இருந்ததால், எலிகள் காருக்குள்ளே கும்மாளம் போட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று அதிகாலை எலிகள் காருக்குள்ளே உள்ள வொயர்களை கடித்துள்ளது. இதில் கார் தானாக ஸ்டார்ட் ஆகி ஓட ஆரம்பித்துள்ளது. இதனைப்பார்த்த அருகில் இருந்தவர்கள்அரசுவுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பதறியடித்து ஓடிவந்த அவர், சாமர்த்தியமாக காரை நிறுத்தியுள்ளார். பின்னர் எலி வொயரை கடித்ததால் கார் ஸ்டார்ட் ஆனது தெரியவந்தது. மேலும் எலி கடித்த வொயர்களில் இருந்து புகை வந்ததால் பின்னர் தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளனர். எலி கடிதத்தில் கார் முதல் கியரில் கிடந்ததாலும், ஹேண்ட் பிரேக் போடாததாலும் கார் ஓடத்தொடங்கியது. எனவே காரை நிறுத்துபவர்கள் கண்டிப்பாக கியரை நியூட்ரல் செய்தும், ஹேண்ட் பிரேக்கை போட்டும் வையுங்கள்.

loading...