திருமணமாகி 4 நாளில் விருந்துக்கு சென்ற ஜோடிகள்.. அறையில் கணவன் கண்ட அதிர்ச்சி காட்சி!

Report
11240Shares

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் செல்வராஜ்(29) இவர், தையல் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு தேவி என்பவருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து, இருவரும் தாராபுரத்தில் உள்ள அக்கா வீட்டிற்கு விருந்திற்காக சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் தடபுடலாக விருந்து ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டு இருந்துள்ளது.

இந்நிலையில் அங்கு தனியாக அறைக்குச் சென்ற தேவி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அதனால் குடும்பத்தினர்கள் கதவை தட்டி உள்ளனர்.

மேலும் கதவை திறக்காததால் அதிர்ச்சியடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அங்கு தேவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்ட அனைவரும் கதறி அழுதுள்ளனர்.

இதையடுத்து, போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த போலீசார் தேவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இந்நிலையில் திருமணமான நான்கு நாட்களிலேயே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loading...