கையெடுத்து கும்பிட்டு ஐயா அடிக்காதீங்க என கெஞ்சிய ஜெயராஜ்.... ரூ.5000 கேட்ட பொலிஸ்! பணத்தை வாங்கிய பின்பும் இப்படியா?

Report
1033Shares

சாத்தான் குளம் இரட்டைக் கொலை வழக்கு மக்கள் மத்தியில் நீங்காத துயரத்தினை ஏற்படுத்தியதோடு, குறித்த வழக்கில் நிலை என்ன என்பதையும் அவ்வப்போது தெரிந்துகொள்ள ஆர்வமாகவும் இருந்து வருகின்றனர்.

தற்போது காவல்நிலையத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் அம்பலமாகியுள்ளது. குறித்த சாத்தான் குளம் காவல்நிலையத்திற்கு பென்னிக்ஸ் வக்கீல் நண்பர் ஒருவர் சென்ற போது, விசாரித்து அனுப்பிவிடுகிறோம் என்று டி.எஸ்.பி பிரதாபன் கூறியுள்ளார்.

ஆனால் தற்போது குறித்த டி.எஸ்.பி சம்பவ இடத்திலிருந்து மறைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த காவல்நிலையத்திற்கு வெளியே வழக்கறிஞருடன், பென்னிக்ஸ் தாய்மாமாவும் நின்று ஜன்னல் வழியாக அவதானித்த போது அடித்து துவைத்துள்ளனர்.

"ஐயா வலிக்குது அடிக்காதீங்க'' என்று ஜெயராஜ் எஸ்.ஐ.க்களை கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறார். சரி, "ஐயாயிரம் ரூவா குடு, ஒரு சின்னக் கேசாப் போட்டு உன்னை வெளியே அனுப்பி விடுவதாக கூறியுள்ளார் என்று எஸ்.ஐ. பாலகிருஷ்ணன்.

இதனைக் கேட்டதும் பென்னிக்ஸ் தாய்மாமா வீட்டிற்கு சென்று 5000 ஆயிரம் பணத்தினை எடுத்துக் கொண்டு கொடுத்துள்ளார். ஆனால் பணத்தினை வாங்கிக்கொண்டு சொன்னதை செய்யாத எஸ்.ஐ.பாலகிருஷ்ணனும், ரகுகணேசும் கூட்டணி போட்டு மீண்டும் வெறித்தனமாக அடிக்க தொடங்கினார்களாம்.

பொலிசார் முரட்டு அடியால், புட்டங்கள், வயிற்றுப் பகுதி ஊதிப் போய் மரண வேதனையில் கோவில்பட்டி கிளைச் சிறையிலடைக்கப்பட்ட பென்னிக்ஸை, அவரது நண்பர்கள் நான்கு பேர் ஜூன் 22 அன்று மனு போட்டு முறையாக பார்த்திருக்கிறார்கள். வலியால் தள்ளாடியபடி வந்த பென்னிக்ஸைப் பார்த்து நண்பர்கள் கண்ணீர் விட்டுள்ளனர்.

"போலீஸ்காரங்க நகழவிடாம மிதிச்சிக்கிட்டு லட்டியால தொடர்ந்து அடிச்சிக்கிட்டேயிருந்தாங்க. கம்புல எண்ணைத் தடவி ஆசனவாயில் உள்ளாற சொருவுனதால கடுமையான வலியப்பா, ரத்த ஒழுகல் நிக்கல்ல, உடம்புக்கு முடியல, நா பொழைக்க மாட்டேன் போலருக்குப்பான்னு'' பென்னிக்ஸ் கதறியதை பார்த்து நண்பர்கள் துடித்திருக்கிறார்கள்.

அன்று இரவு 9 மணிக்கு பென்னிக்ஸ் இறந்த தகவல், நண்பர்களை எட்டியதும் உறைந்துவிட்டார்களாம். இவைகளெல்லாம் சாட்சியமாக்கப்படலாம்.

எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், பணகுடியில் எஸ்.ஐ.ஆக இருந்தபோது, பெண் ஒருவருக்கு தவறான செய்கையைக் காட்டியதோடு, லாட்ஜ்க்கு செல்லலமா என்று கேட்டதுடன் தகாத வார்த்தையும் பேசியுள்ளாராம்.

கொதித்துப்போன அந்த பெண், எஸ்.பி. வரை ஆதாரத்துடன் அவரது வக்ர உணர்வைக் கொண்டு செல்ல, விவகாரமாகி பின் அங்கிருந்து வீரவநல்லூருக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அங்கேயும் பிரச்சனையாக, திசையன்விளை மாற்றப்பட்டவர், அங்குள்ள வசதிபடைத்தவர்கள் தொடர்பான புகார்கள் வரும்போது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு பணத்தினை வாங்கிய விவகாரம் இறுதியில் சாத்தான் குளத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

விசாரணையில் களமிறங்கியிருக்கும் சி.பி.சி.ஐ.டி. டீம் படுகொலையான இருவரின் வீடு, கடை, அக்கம்பக்க பகுதிகளிலும் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளது.

loading...