விலகியது மர்மம்!... 14 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பங்கள்

Report
1317Shares

திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 9ம் வகுப்பு மாணவியின் வழக்கில் அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோமரசம்பேட்டை அருகிலுள்ள அதவத்தூா் பாளையத்தைச் சோ்ந்த பெரியசாமி மகள் கங்காதேவி (14). 9-ஆம் வகுப்பு

படித்து வந்த இவா், சகத் தோழிகளுடன் நேற்று மதியம் விளையாடிக் கொண்டிருந்தாா்.

இயற்கை உபாதைக்காக காட்டுப் பகுதிக்குச் செல்வதாக வீட்டிலுள்ளவா்களிடம் கூறிச் சென்ற கங்காதேவி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவரது தாய், காட்டுப் பகுதிக்குச் சென்று தேடிய போது, கருவேலமுள் பகுதியில் முகம் மற்றும் உடல் பாதி எரிந்த நிலையில் கங்காதேவி கிடப்பதை கண்டு சப்தமிட்டாா்.

இதைகேட்டு அப்பகுதி மக்கள் ஒன்றுகூடியதுடன், குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு வந்து, கங்காதேவியின் சடலத்தைக் கைப்பற்றினா்.

குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் சிறிது தொலைவு சென்று, அப்பகுதியிலேயே படுத்துக் கொண்டது.

இதனையடுத்து திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர், சரக டிஐஜி ஆனி விஜயா நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரித்ததுடன் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்தார்.

மேலும் போராட்டம் நடத்தியவர்களிடம், குற்றவாளிகள் எவராக இருந்தாலும் கண்டறிந்து, தண்டனை வாங்கித் தராமல் விடமாட்டோம். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என உறுதியளித்தார்.

இதற்கு மத்தியில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது.

அதில் அவர் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் வேறு பல கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

இந்த நிலையில் சிறுமி மரணம் தொடர்பாக அவரது உறவினர் செந்தில் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

loading...