திருமணமான இரண்டு மாதத்தில் நடந்த துயரம்... சத்தமின்றி இறுதிக்காரியத்தை முடித்த பெற்றோர்! நடந்தது என்ன?

Report
6515Shares

திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் ஒருவர் தாய் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதால், பெற்றோர்கள் யாரும் தெரியாமல் அடக்கம் செய்துள்ளது தற்போது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

காஞ்சிபுரம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை(23). 2 மாதத்துக்கு முன்பு பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று உத்தரமேரூரில் உள்ள தனது அம்மா வீட்டில் செந்தாமரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் மகள் தற்கொலை செய்து கொண்டதை மறைத்த பெற்றோர்கள் பொலிசாரிடம் புகார் ஏதும் தெரிவிக்காமல் அடக்கம் செய்துள்ளனர்.

குறித்த விடயத்தினை அறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு வந்ததுடன், செந்தாமரையின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்கு அனுப்பியதுடன், சொந்தக்காரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கேட்ட உறவினர்கள், செந்தாமரையின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறியதுடன் பொலிசில் புகாரும் அளித்துள்ளனர்.

பொலிசாரின் விசாரணையில், செந்தாமரை ஒருவரைக் காதலித்து வந்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் அவசரமாக வேறு ஒருவருக்குத் திருமணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் திருமணம் முடிந்ததிலிருந்து மிகவும் சோகத்துடன் மனமுடைந்து காணப்பட்டதுடன், வெளியில் செல்வதற்கும் பல கட்டுப்பாடுகள் பெற்றோரால் விதிக்கப்பட்டுள்ளதாம். இதனால் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பே, இது கொலையா? தற்கொலையா? என்பது தெரியவரும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

loading...