உண்மையை மறைத்து அரங்கேறிய திருமணம்... துடிக்க துடிக்க உயிரிழந்த புதுப்பெண்!

Report
1214Shares

திருமணமான 8 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு(25) டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த நீலவேணி (19) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின் கணவர், மாமியார், மாமனார் என கூட்டுக்குடும்பமாக நீலவேணி வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை நீலவேணி அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அப்போது நீலவேணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட விவரம் தெரிய வந்தது. ஆனால் அந்த இடத்திலேயே பரிதாபமாக அவர் இறந்து போனார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் விஷ்ணு ஏற்கனவே ஒரு பெண்ணை மணம் செய்து குடும்பம் நடத்திய விவரம் நீலவேணிக்கு தெரிய வந்துள்ளது.

முதல் திருமணத்தை மறைத்து நீலவேணியை 2-வது திருமணம் செய்ததால் இதுகுறித்து கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று காலையும் இதேபோல தகராறு ஏற்பட ஆத்திரத்தில் நீலவேணி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட விவரம் தெரிய வந்தது.

நீலவேணிக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆகியிருப்பதால் விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

loading...