சாத்தான்குளத்தில் அழிந்துபோன சிசிடிவி காட்சிகள்.. காரணம் இது தானாம்.. சிபிசிஐடியின் அதிரடி!

Report
1955Shares

இந்தியாவை உலுக்கிய சாத்தான்குளம், தந்தை-மகன் மரணம் தொடர்பான வழக்கினை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கைதான காவலர்கள் 5 பேரும் தற்போது மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில், காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் எப்படி அழிந்தது? என்பது குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 6 மாதமாகவே தொழில்நுட்பப் பிரிவு பதவிகள் காலியாக இருப்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், டிஜிபி அலுவலக உத்தரவுப்படி, குறைந்தபட்சம் 15 நாட்களின் சிசிடிவி காட்சிகளை அழிக்கக் கூடாது என்ற நிலையில், பிப்ரவரி மாதமே சிசிடிவி கேமராவில் செட்டிங்ஸ் மாற்றப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, சிசிடிவியில் நாள்தோறும் காட்சிகள் அழியும் வகையில் செட்டிங்ஸ் செய்தது யார் என சிபிசிஐடி சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காவல்நிலையத்தின் சிசிடிவி யார் கட்டுப்பாட்டில் இருந்தது என்றும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

loading...