மாமனார் நல்லா பத்துக்குறாரு... கணவரின் அப்பாவை திருமணம் செய்த இளம் பெண்! பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்

Report
1402Shares

கணவர் இறந்து இரண்டு வருடத்தில் இளம் பெண் ஒருவர் மாமனாரை திருமணம் செய்த சம்பவம் குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணான ஆர்த்தி சிங் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

குடும்ப வாழ்க்கையைச் சந்தோசமாக ஆரம்பிக்கலாம் என ஆசையாக இருந்த அவரின் கனவு பாதியில் தகர்ந்து போனது.

திடீரென அவரது கணவர் இறந்து போனார். என்ன செய்வது எனத் தெரியாமல், இளம் வயதில் கணவனை இழந்த ஆர்த்தி தனிமையில் தவித்துள்ளார்.

இந்நிலையில் தனிமையில் தவித்து வந்த ஆர்த்தியை அவரது மாமனார் கிருஷ்ணா ராஜ்புத் சிங், நன்றாகக் கவனித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ராஜ்பூத் க்ஷத்ரிய மகாசபாவின் குழு அமைப்பின் முன்னெடுப்பில் ஆர்த்தியை அவரது மாமனார் கிருஷ்ணா ராஜ்புத் சிங் திருமணம் செய்து கொண்டுள்ளார். கணவர் இறந்து 2 வருடமானதால் ஆர்த்தி சிங்கின் மறுமணத்திற்குச் சாதிய அமைப்பினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த செய்தி ஆர்த்தியின் குடும்பத்தினருக்குச் சற்று அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலானதையடுத்து, பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

loading...