என் கணவரை வனிதா திருமணம் செய்ய இவரும் ஒரு காரணம்!... புகார் கொடுத்த முதல் மனைவி

Report
729Shares

தன்னுடைய கணவரான பீட்டர் பாலை வனிதா விஜயகுமார் திருமணம் செய்ய காவல் ஆய்வாளரும் ஒரு காரணம் என முதல் மனைவியான எலிசபெத் புகார் அளித்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 27ம் திகதி பீட்டர் பால் என்பவரை தனது வீட்டில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

தனக்கு முறையான விவாகரத்து அளிக்காமல் நடிகை வனிதாவை திருமணம் செய்ததாக பீட்டர் பால் மீது அவரது முதல் மனைவி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் பீட்டர் பாலை விசாரித்துள்ளார்.

அப்போது பீட்டர் பால் தனது முதல் மனைவியான எலிசபெத் என்பவரை முறையாக விவாகரத்து செய்துவிட்டுதான், வனிதா விஜயகுமாரை திருமணம் செய்ய இருப்பதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

எனினும் அடுத்த சில நாட்களிலேயே அவ்வாறு எந்தவித முறையான விவாகரத்து அளிக்காமல் வனிதா விஜயகுமாரை திருமணம் செய்துள்ளார்.

மேலும் திருமணம் நடைபெறுவதற்கு ஒரு சில நாட்கள் முன்பு கூட காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டு, திருமணம் நடக்கப்போகிறது என கூறியும் அலட்சியப்படுத்தியதாக தெரிகிறது.

காவல் ஆய்வாளரின் அலட்சியப் போக்கினால் தான் வனிதா - பீட்டர் பால் இருவருக்கும் திருமணம் நடந்ததாகவும்

எனவே காவல் ஆய்வாளர் வனிதாவிற்கு சாதகமாக செயல்படுகிறார் என்கிற சந்தேகம் எழுந்துள்ளதால் அவரை மாற்றி இந்த வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் புதிய புகாரை அளித்துள்ளார் எலிசபெத்.

loading...