ஆன்லைன் கிளாஸ்க்கு மொபைல் கொடுத்த தாய்... சிறுவனின் பதிலால் ஆடிப்போன குடும்பம்

Report
1169Shares

மகனின் ஆன்லைன் வகுப்பிற்காக மொபைல் போனைக் கொடுத்த தந்தை 16 லட்சத்தினை இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவரின் 17 வயது மகன் பள்ளியில் படித்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பல பள்ளிகள் வகுப்புகளை ஆன்லைனில் நடத்தி வருகிறது.

இதனால் குறித்த மாணவன் ஆன்லைன் வகுப்பிற்காக அம்மாவின் மொபைல் போனை கேட்ட போது, படிப்பிற்கு என்று கொடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த சிறுவன் பல மணி நேரம் மொபைல் போனிலேயே நேரத்தைக் கழித்துள்ளார். இதனைக் கவனித்த அந்த சிறுவனின் தந்தை ஏன் எப்போதும் மொபைலும், கையுமாக இருக்கிறாய் எனக் கேட்ட போது, ஆன்லைன் வகுப்பில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் சிறுவனின் தந்தை எதேச்சையாகத் தனது வங்கிக் கணக்கைச் சோதனை செய்த போது, எதிர்காலத்திற்காகத் தான் சேமித்து வைத்திருந்த 16 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார்.

இதுகுறித்து மகனிடம் விசாரித்த போது, ஆன்லைன் கிளாஸ் என்று மொபைல் வாங்கிய மகன், பப்ஜி கேம்-ஐ விளையாடியதோடு, அடுத்தடுத்த கட்டங்களை எட்டவும், புதிய அப்கிரேடுகளை செய்யவும் அவர் தனது பெற்றோரின் மூன்று வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியுள்ளார்.

இவ்வாறாக, ரூ.16 லட்சத்தை செலவழித்த சிறுவன், வங்கியிலிருந்து வந்த குறுந்தகவலையும் பெற்றோருக்குத் தெரியாமல் உடனே அழித்துள்ளார்.

சிறுவனைப் பதிலைக் கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து, அவரது தந்தை காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு விளையாட்டில் போட்ட பணம் கிடைப்பது கடினம் என்று கூறியுள்ளனர்.

தான் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை இப்படிச் சீரழித்து விட்டானே எனக் கதறிய தந்தை, கோபத்தில் மகனை இருசக்கர வாகனங்கள் சீர் செய்யும் மெக்கானிக் கடையில் சேர்த்து விட்டுள்ளார்.

குழந்தைகளிடம் செல்போனைக் கொடுத்துவிட்டு கண்டுகொள்ளாமல் இருக்கும் பெற்றோர்களே இதை பாடமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

loading...