சூடுபிடிக்கும் காசி விவகாரம்; காசியின் தங்கை கதறல்.. சிபிசிஐடியின் அதிரடி விளக்கம்..!

Report
2304Shares

தமிழகத்தில் பொள்ளாச்சி சம்பவத்திற்கு பிறகு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம் என்றல் அது நாகர்கோவில் காசியின் வழக்கு தான். பெண்களுடன் பழகி வீடியோ எடுத்து மிரடி கைது செய்யப்பட்டு தற்போது சிபிசிஐடி விசாரணையில் உள்ளார்.

மேலும், போலீசாரின் விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்த நிலையில், அதிரடி திருப்பமாக அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

காசியின் நண்பர்களாக ஜினோ மற்றும் தினேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்தன.

இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் காசியின் தந்தை தங்க பாண்டியனையும் சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்தார்கள்.

தவறு செய்த மகனைத் திருத்த வேண்டிய இடத்தில் இருக்கும் தந்தையே ஆதாரங்களை அழித்து காசியைக் காப்பாற்ற முயன்ற வழக்கில் போலீசார் அவரை கைது செய்தார்கள்.

இந்நிலையில் போலீசார் தங்களை, சாத்தான்குளத்தில் நடந்தது போன்று உங்களுக்கும் நடக்கும் என மிரட்டுவதாகக் காசியின் தங்கை பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ''தங்களின் வீட்டிற்கு வந்த போலீசார் தனது தாயைத் தாக்கியதாகவும், சாத்தான்குளம் சம்பவம் போல உங்களுக்கும் நடக்கும் எனக் கூறியதாகவும், எனவே தமிழக அரசு எங்களுக்கு உயிருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்'' எனவும் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

ஆனால், காசியின் வீட்டுக்கு சென்றபோது விஏஓ, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்றுதான் விசாரணை நடத்தியதாகவும் காசியும் தங்கை கூறுவதில் உண்மை இல்லை என்றும் சிபிசிஐடி போலீசார் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“விசாரணைக்கு முறைப்படி ஒரு டீமா காசி வீட்டுக்கு போனப்போ, அங்கு யாரும் மயங்கி விழவில்லை, சிபிசிஐடிக்கு துப்பாக்கியே கிடையாது , அப்படி இருக்கும்போது குற்றவாளிகளை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல ஆயுதப்படை போலீசாரை கேட்டு வாங்குவோம்.

ஆனால் இந்தப்பெண் அப்பா மேல் உள்ள பாசத்தால் அப்படி சொல்வதாக நினைக்கிறோம். நாங்கள் சும்மா யாரையும் கைது செய்ய மாட்டோம், காசியின் தந்தை ஏகப்பட்ட தடயங்களை அழித்திருக்கிறார்.

எனவே சட்டபூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைத்தான் எடுத்தோம். அவர்கள் வீட்டிலிருந்து எடுத்த லேப்டாப்பில் ஆபாசப் படங்களாக இருந்தன.

அதை வைத்து திறந்து பார்த்தபோது, அதை பார்த்து அவர்களே ஒரு மாதிரியாகத்தான் நின்றிருந்தார்கள். எப்படியாவது போலீஸ் மீது பழி போட வேண்டும் என்று இப்படி கூறியிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளனர்.

loading...