சாத்தான்குளம் விவகாரம்; இப்படி நடக்கும்னு நினைக்கவில்லை.. கதறி துடித்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன்..!

Report
4265Shares

சாத்தான்குளம் விவகாரம் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் விசாரணையின்போது மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்டதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.

இதுபற்றி விசாரணையில் பேசிய பாலகிருஷ்ணன், “சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் விசாரணைக்கு அழைத்து வருபவர்களை வழக்கமாகத் தாக்குவது போலவே ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் தாக்கினோம்.

அவர்களுக்கு இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை சார். அதன் காரணமாக கைது செய்யப்படுவேன் என்றெல்லாம் நினைக்கவில்லை.

மேலும், காவல் நிலையத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உதவிக்கு யாராவது இருக்கிறார்கள். நான், சாதாரணக் குடும்பத்தில் இருந்து பணிக்கு வந்திருக்கிறேன்.

காவலராகப் பணியில் சேர்ந்து, பின்னர் எஸ்ஐ தேர்வுக்குச் சென்று பணியில் சேர்ந்தேன். என் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது” என தழுதழுத்த குரலில் பேசியுள்ளார்.

இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் அவரை சமாதானப்படுத்தியே விசாரணையைத் தொடர்ந்திருக்கிறார்கள். சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நால்வரையும் ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவெடுத்துள்ளனர்.

loading...