பெனிக்ஸின் கடைசி சிரிப்பு... அன்று இரவு ஸ்டேசனில் நடந்தது என்ன? தீயாய் பரவும் காட்சி

Report
774Shares

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், போலீசார் கடுமையாக தாக்கப்பட்டதாக அந்த காவல் நிலையத்தில் அப்போது பணியில் இருந்த பெண் கான்ஸ்டபிள் சாட்சியம் அளித்துள்ளனர். அவரது கணவரும் இதை உறுதி செய்துள்ளார்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றக்கூடிய அந்த பெண் காவலர், சம்பவத்தன்று இரவு 8.30 மணி அளவில் பணிக்கு சென்றுள்ளார்.

அப்போது காவல் நிலையத்திற்குள், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

குறித்த பெண் காவலருக்கு காவல்நிலையத்தில் நடப்பது என்ன? என்பதை கவனிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் மிகவும் உடைந்து போன பெண் காவலரின் கணவர் இவ்வாறு விளக்கியுள்ளார்.

அன்பு இரவு ஸ்டோஷனுக்கு மனைவி போய்ட்டாங்களா என்பதை தெரிந்து கொள்வதற்கு போன் செய்தேன். அப்போது அவர் உள்ளே யாரையே அடிக்கிறாங்க... நான் உள்ளே சென்று பார்க்க வேண்டும்... பார்த்த பின்பு கூறுகின்றேன் என்று கணவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

பின்பு 10 மணியளவில் திரும்ப கணவர் போன் செய்த போது, அப்பா மற்றும் மகன் இரண்டு போரையும் பயங்கரமாக அடிக்கின்றனர் எனக்கு பாவமாக இருக்கின்றது என்று கூறியுள்ளார்.

மேலும் பெரியவர் (ஜெயராஜ்) என்கிட்ட தண்ணீர் கேட்டார். நானும் தண்ணீர் கொடுத்ததாகவும் கூறினார். மீண்டும் 11 மணிக்கு மனைவிக்கு போன் செய்த போது இன்னும் அடித்துக்கொண்டிருப்பதாகவும், அவர்கள் இருவரின் உடம்பிலிருந்தும் ரத்தம் வந்துகொண்டிருக்கின்றது என்று கூறி மிகவும் கஷ்டப்பட்டாராம்.

பின்பு இரண்டு பேரும் இறந்துபோனது தெரிந்ததும், இடிந்து போன எனது மனைவி சாட்சி சொல்வதா? வேண்டாமா? என்று அதிகமாக யோசித்தார். நான் நமக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர் அவர்களுக்கு நாளை எதாவது என்றால் யாரு வந்து சாட்டு சொல்வார்கள்? அதனால் நீ துணிந்து சாட்சி சொல்... வேலை போனாலும் பரவாயில்லை நான் சோறு போடுகின்றேன் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், எனது மூத்த மகள் அவரது அம்மாவிடம் சென்று சாட்சி கூறும்படியும் கூறினார். பின்பு சாட்சி கூறிவிட்டு வந்துள்ளார். ஆனால் எனது குடும்பத்திற்கு இன்னும் பாதுகாப்பில்லை. இருவரும் வேலைக்கு சென்று வருவதால் பாதுகாப்பு வேண்டும் என்றும் அவரது கணவர் கூறியுள்ளார்.

loading...