யார் கண்களிலும் தென்படாத அரியவகை பாம்பு! 129 ஆண்டுகளுக்கு பின்னர் தென்பட்ட அதிசயம்... தீயாய் பரவும் புகைப்படம்

Report
1146Shares

அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரியவகை பாம்பு ஒன்று 129 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விஷத்தன்மையற்ற இந்த பாம்பு 50 முதல் 60 செமீ நீளம் வரை வளரக்கூடியது.

1891ம் ஆண்டு பிரிட்டிஷ் தேயிலை தோட்டங்களை உருவாக்கிய சாமுவேல் எட்வார்ட் பேல் என்பவர் இந்த வகை பாம்பை முதன்முதலில் சிபிசாகர் மாவட்டத்திக் பார்த்தார்.

அந்த பாம்புகளை பிடித்து ஒன்றை கொல்கத்தாவில் உள்ள இந்த விலங்கியல் ஆய்வு நிறுவனத்துக்கும், மற்றொன்றை லண்டனில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்துக்கும் அனுப்பி வைத்தார்.

அதன்பிறகு இந்த வகை பாம்புகள் யார் கண்களிலும் தென்படவில்லை. அழிந்துவிட்டதாகவே கருதப்பட்டது. இந்த நிலையில் 129 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து 118 கிமீ தொலைவில், அஸ்ஸாம்-அருணாச்சலப் பிரதேச எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

loading...