மீண்டும் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு? இறைச்சி கடைகளுக்கு அனுமதி உண்டா? முழுவிவரம் உள்ளே

Report
169Shares

தமிழகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜூலை 31 வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

சென்னை, மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மட்டும் ஜூலை 5 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு குறித்த முழுவிவரங்களை கீழே காணலாம்,

 • ஜூலை 5 ஆம் தேதி முதல் 4 ஞாயிற்றுகிழமைகளில் எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்
 • மதுரை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கு அமுல்
 • மாவட்டங்களுக்குள் தனியார் மற்றும் அரசுப் போக்குவரத்து ஜூலை 1 - ஜூலை 15 வரை தற்காலிகமாக நிறுத்தம்
 • ஜூலை 6-ம் தேதி முதல் கோயில், மசூதி, தேவாலயத்தில் பொதுமக்கள் தரிசனம் அனுமதி
 • மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி தரிசனம் அனுமதிக்கப்படாது
 • நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த வித தளர்வும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்
 • மதம் சார்ந்த வழிபாடுகள், சுற்றுலா தலங்களுக்கு தடை நீட்டிப்பு
 • சென்னை மாநகராட்சி, மற்ற மாநகராட்சிகள், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் அனுமதிபெற்று இறைச்சி கடைகள் செயல்படலாம்
 • திருமணம், இறுதிச்சடங்குகளில் 50 பேர் வரை பங்கேற்க அனுமதி
 • பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கு தடை தொடரும் என்றும், ஆன்லைன் கல்விக்கு தடையில்லை என்றும், மாவட்டம், மாநிலங்களுக்கு இடையே இ-பாஸ் நடைமுறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட ஐடி நிறுவனங்கள் ஜூலை 6-ம் தேதி முதல் அதிகபட்சமாக 80 பேருடன் இயங்கலாம்.
 • தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
 • மால்கள் தவிர்த்து ஷோரூம்கள், ஜவுளி, நகைக்கடைகள் 50% பணியாளர்களுடன் இயங்கலாம். குளிர்சாதன வசதி பயன்படுத்த கூடாது.
 • உணவகங்களில் 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ணலாம். சமூக இடைவெளியை கடைபிடிக்கப்பட வேண்டும். குளிர்சாதன வசதி பயன்படுத்த கூடாது.
 • தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
 • வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, பயன்படுத்தலாம்.
 • ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.
 • முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல், அரசு தனியாக வழங்கிய நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.
 • மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள், சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

loading...