பூட்டிய வீட்டில் அலங்கோலமாக காணப்பட்ட அண்ணன், தங்கை.... அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

Report
3763Shares

சென்னையில் வீட்டுக்குள் அண்ணன், தங்கை இரண்டு பேர் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 5-வது பிளாக் 115வது தெருவில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிசாருக்கு வந்த தகவலின் பேரில், பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அப்போது வீட்டுக்குள் ஆண், பெண் இரண்டு நபர்களின் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளன. படுக்கையறையில் உள்ள மெத்தையில் ஆணின் சடலமும், மற்றொரு அறையில் பெண்ணின் சடலும் கிடந்துள்ளது. இவர்களுக்கு 45 வயதிலிருந்து 50 வயதிருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிசாருக்கு, வீட்டிற்குள் இருந்து சின்னத்திரை நடிகர் சங்க அடையாள அட்டை ஒன்று இருந்துள்ளது.

இதன் பின்பு நடத்தப்பட்ட விசாரணையில் இறந்தவர்கள் அண்ணன், தங்கையான ஸ்ரீதர் மற்றும் ஜெய கல்யாணி என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் இந்த வீட்டில் வசித்து வருவதாகவும், இதுவரை இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loading...