காஃபிடே சித்தார்த்தாவின் மகனை மணக்கிறார்.. பிரபல தொழிலதிபரின் மகள்.. யார் தெரியுமா?..

Report
728Shares

தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர் கஃபே காஃபி டே உரிமையாளர் சித்தார்த்தாவின் மகனை கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சிவகுமாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

கடந்த ஆண்டு ஜூலை 31-ந் தேதி சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டார். கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனான சித்தார்த்தாவின் தற்கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவகுமாரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், கஃபே காபி டே சித்தார்த்தாவின் மகன் அமர்த்தியாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சிவகுமாரும் பேட்டி ஒன்றில் தெரிவித்து திருமணத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார். 27 வயதாகும் அமர்த்தியா அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு தாயார் மளவிகாவுடன் இணைந்து சொந்த தொழிலை கவனித்து வருகிறார்.

23 வயதாகும் ஐஸ்வர்யா பொறியியல் படிப்பை முடித்துவிட்டு தந்தை சிவகுமாரின் குளோபல் அகாடமி ஆப் டெக்னாலஜி என்னும் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

மறைந்த சித்தார்த்தாவும், சிவகுமாரும் நெருங்கிய உறவினர்கள் ஆவர். சித்தார்த்தா உயிருடன் இருந்தபோதே இந்த திருமணம் உறுதி செய்யப்பட்டு விட்டதாம். அவர் மறைந்து முழுதாக ஒரு வருடம் ஆகவில்லை என்பதால் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த வருடம் சிவகுமார் சிறைவாசம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டார். இதில் வருமான வரித்துறை விசாரணையும் அடக்கம். அப்போது தான் சிவகுமாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்து வெளியுலகத்துக்கு தெரிய வந்தது.

குறிப்பாக அவரது பெயரில் 100 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக வருமான வரித்துறை வெளியிட்டது. மேலும், இந்த திருமணம் ஆகஸ்ட் மாதம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

அண்மையில் முன்னாள் முதல்வர் குமாரசாமி மகன் நிகிலுக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணப்பா பேத்தி ரேவதிக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கர்நாடகாவில் நடைபெறும் அரசியல் தலைவர்கள் இல்ல 2-வது திருமணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

loading...