மாமியாரை உயிருடன் தீவைத்து எரித்த 23 வயது மருமகள்... மாமியாரிடம் அனுபவித்த கொடுமை தான் என்ன?

Report
857Shares

காபியில் 5 தூக்க மாத்திரைகளை கலந்துகொடுத்து, தூங்கி கொண்டிருந்த மாமியாரை, மருமகள் தீ வைத்து எரித்து கொன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மருமகள் கர்ப்பமாக இருக்கும் பொழுது மாமியார் ஒருவர் வயிற்றில் தீ வைத்தது சோகத்தினை ஏற்படுத்தியது.

வல்லக்கோட்டை அருகிலுள்ள மணியம்பலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். மருந்து நிறுவனத்தில் வேலை செய்யும் இவருக்கு இரண்டு வருடத்திற்கு முன்பு பிரதீபா(23) என்ற பெண்ணுடன் திருமணமாகி 9 மாத குழந்தை ஒன்றும் உள்ளது.

ரமேஷின் அப்பா டீக்கடையும், அம்மா ராஜம்மாள்(58) 100 நாள் வேலைக்கு செல்கின்றாராம். இந்நிலையில் நேற்று வீட்டில் கரும்புகையுடன் துர்நாற்றமும் எடுத்துள்ளது. உடனே அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது ராஜம்மாள் தீயில் கருகிக்கொண்டிருந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து பொலிசாரின் விசாரணையில், பிரதீபா மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவரை விசாரித்துள்ளனர். டீச்சர் டிரைனிங் முடித்துள்ள பிரதீபாவிற்கு மாமியார் வீட்டில் வரதட்சணைக் கொடுமை இருந்துள்ளது.

மேலும் வரதட்சணைக் கொடுக்கும் வரை எனது கணவருடன் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வந்தார். இதனால் நாளுக்கு நாள் கோபம் அதிகமாகிய நிலையில் சம்பவத்தன்று, 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவர் காபி கேட்டார்.

அப்பொழுது காபியில் 5 தூக்கமாத்திரை கலந்து கொடுத்ததால் தூங்கிவிட்டார். பின்பு பெட்ரோலை ஊற்றி தீவைத்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு வந்துவிட்டேன். எனது மாமியாரின் கதறல் சத்தம் கேட்டும் நான் கேட்காதது போன்று இருந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

சந்தோஷமாக வாழமுடியவில்லையே என்பதால் மாமியாரை இவ்வாறு உயிருடன் தீவைத்து எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

loading...