காமக்கொடூரனிடம் சிக்கிய தாயும், 3 வயது குழந்தையும்... உடம்பெல்லாம் காயத்துடன் அலறித்துடித்து வந்த கொடுமை!

Report
2233Shares

சமீப காலமாக சிறு குழந்தைகளின் பாலியல் சீண்டல்கள் அளவிற்கு அதிகமாக அரங்கேறி வருகின்றது.

கம்பம் தாத்தப்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராஜா. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், 23 வயது பெண் ஒருவர் மீது மீண்டும் காதல் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

குறித்த பெண்ணிற்கு திருமணமாகி 3 வயது பெண் குழந்தை இருந்த நிலையில் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனால் சிங்கராஜா, தன் குடும்பத்தைவிட்டு விட்டு, இந்த பெண்ணையே 2வதாக கல்யாணம் செய்து, தனியாக வீடு எடுத்து ஒருமாதமாக தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண், தன்னுடைய வீட்டிலிருந்து, உடம்பெல்லாம் ரத்த காயத்துடன் அலறி துடித்தபடியே வெளியே ஓடிவந்தார். அவருடன் சேர்ந்து 3 வயது குழந்தையின் உடம்பிலும் ரத்தம் வழிந்தது. இதனால் பதறிய அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பொலிசாரின் விசாரணையில், அன்றைய தினம் உறவுக்கு சிங்கராஜா அழைத்ததற்கு குறித்த பெண் மறுத்துள்ளதால், கோபமான அவரது கணவர் சரமாரியாக பெண்ணை தாக்கியதுடன், அவரது தலையை பிடித்து சுவற்றில் முட்டி மோத வைத்ததில் மண்டை பிளந்து ரத்தம் கொட்டியுள்ளது.

மீண்டும் ஆத்திரம் தீராமல் இருந்த சிங்கராஜா 3 வயது குழந்தையை மிக கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதுடன், குழந்தையை உடம்பெல்லாம் கடித்து கடித்து காயமாக்கியுள்ளார். அதிலிருந்து ரத்தமும் வர ஆரம்பித்துள்ளதையடுத்து உயிரைக்காப்பாற்றிக்கொள்ள இவ்வாறு பெண் கதறிக்கொண்டு வெளியே வந்துள்ளது தெரியவந்துள்ளது.

குறித்த பெண் அளித்த புகாரின் பேரில் சிங்கராஜாவைக் கைது செய்து பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.

loading...