பாலுக்காக அழுத குழந்தை.. பால் வாங்க ஜெட் வேகத்தில் ஓடிய பொலிசாருக்கு அடித்த அதிர்ஷ்டம்? சி.சி.டி.வியில் சிக்கிய காட்சி

Report
1234Shares

கர்நாடக மாநிலம் பெல்காமில் இருந்து உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூருக்கு சிறப்பு ரயில் ஒன்றில் 4 மாத குழந்தையுடன் ஷரிஃப் ஹாஷ்மி என்ற பெண் அவரது கணவர் ஹசீன் ஹாஷ்மியுடன் பயணம் செய்துள்ளார்.

ஷரிஃப் ஹாஷ்மி ரயில் பயணம் தொடங்கியது முதல் தன் குழந்தைக்கு பால் வாங்க முயற்சித்துள்ளார்.

அதேபோல் ரெயில் கடந்த 31-ந்தேதி போபால் ரெயில்வே நிலையம் வந்துள்ளது. இதற்கு முன் நின்ற சில ரெயில்வே நிலையங்களில் குழந்தைக்கு பால் வாங்க முயற்சி செய்து பால் கிடைக்காததால் போபால் ரெயில் நிலைய ஆர்பிஎஃப் போலீஸ்காரர் இந்தர் சிங்கிடம் தன் நிலையை விளக்கியுள்ளார் ஷரிஃப் ஹாஷ்மி. ஆனால் அங்கும் பால் கிடைக்கவில்லை.

உடனே ஆர்பிஎஃப் போலீஸ்காரர் இந்தர் சிங் யாதவ் ரயில்வே ஸ்டேஷன் வெளியே சென்று பால் வாங்கி வருவததாக கூறி ஓடியுள்ளார். ஆனால் அந்த ஸ்டேஷன்னில் 10 நிமிடங்கள் மட்டுமே ரயில் நிற்கும் என்பது அவருக்கு தெரியும்.

இதனால் தன்னுடைய வேகமான ஓட்டத்தால் வெளியே சென்று பால் வாங்கி ரயில் நிலையம் அடைந்துள்ளார். ஆனால் அவர் உள்ளே வரும் போது ரயில் புறப்பட்டுள்ளது.

ஆனால் குழந்தைக்கு எப்படியாவது பாலை சேர்க்கவேண்டும் என்று எண்ணிய யாதவ் ரயில் பின்னாடியே ஓடியுள்ளார். இறுதியில் ஷரிஃப் ஹாஷ்மியிடம் பாலை சேர்த்துள்ளார்.

இந்த காட்சிகள் அனைத்தும் ரயில் நிலையத்தில் இருக்கும் சி.சி.டி.வியில் பதிவாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த செய்தியை அறிந்த மத்திய ரெயில்வேத்துறை மந்திரி பியூஸ் கோயல், இந்தர் சிங் யாதவை பாராட்டியதோடு, சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

loading...