உடும்பை கொலை செய்து இளைஞர் செய்த மோசமான காரியம்... திருமணமான 4 நாளில் ஏற்பட்ட சோகம்

Report
990Shares

திருச்சியில் தடை செய்யப்பட்ட உடும்பை தனித்தனி பாகங்களாக வெட்டி வசிய மருந்து தயார் செய்வதாக யூடியூபில் வெளியிட்ட வீடியோவால் ஜோசியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

மூடநம்பிக்கைகளின் பெயரில் விலங்குகள் கொல்லப்படுவது தற்போது அதிகரித்து வரும் சூழலில் திருச்சியில் தடைசெய்யப்பட்ட விலங்கினமான உடும்பை வெட்டி மை தயாரித்த சம்பவம் நடந்துள்ளது.

பெரியசாமி என்பவர் திருச்சி மாவட்டம் மணியங்குறிச்சியைச் சேர்ந்தவர். ஜோதிடத்தை தொழிலாக செய்து வரும் இவர் 9 மாதங்களுக்கு முன்பு வசிய மை தயாரிப்பு குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், தடைசெய்யபட்ட உடும்பை பிடித்து அதன் உறுப்புகளை தனி தனியாக அறுத்து காய வைத்து வசிய மை தயாரிப்பதாக பெரியசாமி கூறியுள்ளார்.

தற்போது அந்த வீடியோவானது வனத்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 4 நாட்களுக்கு முன் திருமணம் முடிந்து, மாமியார் வீட்டிற்கு விருந்துக்கு சென்ற பெரியசாமியை, அவசரமாக ஜோதிடம் பார்க்க வேண்டுமென கூறி வரவழைத்த வனத்துறையினர் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அவரது குடும்பத்தார் மற்றும் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

loading...